உறவு என்பது சேர்ந்தே வாழ்வது மட்டுமல்ல
பிரிந்த பின்பும் சேரத் தூண்டுவது கூட.
மறதி என்பது நோய் மட்டுமல்ல
நல்ல மருந்தும் கூட . #நாகூர் ரூமி
பிரிந்த பின்பும் சேரத் தூண்டுவது கூட.
மறதி என்பது நோய் மட்டுமல்ல
நல்ல மருந்தும் கூட . #நாகூர் ரூமி
அவள் அடித்தபோது வலிக்கவில்லை அடித்தபின்
அவள் அழும் போது மட்டுமே வலிக்கிறது - அம்மா
இருக்கு என்பதை விட இல்லை என்பதில் சுகம் அதிகமாக இருந்தாலும்
இல்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.
எந்த பொருளும் இருக்கு என்பதின் சந்தோசம்- அது
என்னிடம் இருக்கு என்பதை காட்டிகொள்வதில் தான் இருக்கு.
இல்லைங்கிற வருத்தம் இருக்கிறவன பார்க்கும்போது மட்டுமே வருது.
என்னை தப்பானவன் என்பவன் பெரும்பாலும் என்னுடன்
சேர்ந்து தப்பு செய்தவனாகவே இருக்கிறான்.
சந்தோசத்துக்காக சம்பாதிச்ச காலம் போய்
சந்தோசத்த இழந்தாத்தான் சம்பாறிக்க முடியும்கிற காலம் வந்துருச்சு.
சந்தோசத்த இழந்து எவ்வளவு நாள் நண்பா சம்பாதிக்கிறது.
வா ஊரு பக்கம் போவோம்.
போலியான புன்னகையோடுதான் போகவேண்டி உள்ளது
நண்பனின் திருமணத்துக்கு கூட - 30 வயசுக்கு மேல Bachelorave
எதிர்காலத்த பற்றி தெரிஞ்சுக்க ஆசைபடுகிறவன்
நிகழ்காலத்தின் நிம்மதியை இழக்கிறான்
எப்படித்தான் முடியுதோ இந்த பசங்களால
அழகான பொண்ணுகளோட நட்பா மட்டுமே பழக.
வயசு ஆகிடாலே எந்த முடிவையும் சுலபமா எடுக்க முடியுறதில்ல -
வேலைய விட்டுருவோம?
நீ எந்த பெண்ணோட வாழணுமுனு தீர்மானிகுறது நீயோ
அந்த பொண்ணோ, ஏன் ஜாதகம் கூட கிடையாது -அத பார்க்கிற ஜோசியகாரந்தான்.
எனக்கு பிடிக்குறமாதிரி வாழ்தால் ஏனோ என்னை யாருக்குமே பிடிக்குறதில்லை.
# fact fact fact
தப்பு செய்வது தப்பல்ல
தப்பிக்க நினைப்பவனுடன் சேர்ந்து தப்பு செய்வதே
தப்பு # ஆர் ராஜா
சமூக சேவையும் - சமூக வலையும் பெரும்பாலும் பயன்படுத்தபடுவது
சுய விளம்பரத்துக்காகவே
ஊருக்கு தெரியாமல் தப்பு செய்பவன் உத்தமன் ஆகிறான்.
செய்த தவறை ஒப்புகொண்டவன் கெட்டவன் ஆகிறான்
தான் செய்த தவறை ஒப்புக்கொள்வதே தலைசிறந்த தைரியம்
மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு # சாத்தானும் வேதம் ஓதலாம் தப்பில்லை
அழகான பெண்ணுடனான ஓர் ஆணின் நட்பு என்பது
சொல்லபடாத / சொல்ல முடியாத காதலாக கூட இருக்கலாம்.
ரோஜா - அழகு உள்ள இடத்தில் ஆபத்து இருக்கும் என்று
எச்சரிக்கும் இறைவனின் படைப்பு
எந்த வேஷத்துக்கும் பொருத்தமல்ல எனது முகம்
சுற்றிலும் நடக்கிறது நாடகம் -விஜயா ஷங்கர்
உங்களது முழு நம்பிக்கைக்கு உரியவன்னல்ல நான் -ஆதலினால்
எப்பொழுதும் இருக்கட்டும் ஓர் சந்தேகப்பார்வை என் மீது .
தப்பு செய்யும் குழந்தையின் மீது அம்மாவின் பாசம் அழுகையாகவும்
அப்பாவின் பாசம் கோபமாவும் வெளிப்படும்.
யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் எனக்கில்லை - ஏனென்றால்
அவர்கள் எதிர்பார்க்கும் பெரும்பாலான தகுதி என்னிடம் இல்லை.
எடை பார்க்கும் இயந்திரம் எல்லாம் நீ ஏறி நின்றால் - உன்
மெல்லிடை பார்த்து வியந்து நிற்கும்.
ஆன்மீகம் என்பது அருளைப் பெறுவது அல்ல
அன்பைத் தருவது -So Niththi loves Ranjitha
மனிதன் தான் செய்த தவறை உணர்வது
அதே தவறால் அவன் பாதிக்கப்படும் போதுதான்
பசியோடு உள்ளவனால் பாடம் பயில இயலாது ....
ஏன் பட்டினியும் ஓர் பாடம் என்பதை கற்பிக்க மறந்தீர் ?- வேலை தேடும் ஏழை பட்டதாரி.
தர்மம் என்பது என்னால் முடிந்ததை நான் தருவது -ஏனோ
அவர்களுக்கு தேவையானதை கேட்டு வாங்குகிறார்கள்.
வலியை சொல்ல வார்த்தைகள் இருந்திருந்தால்
வலியை ஏற்படுத்தும் வார்த்தைகள் கண்டிப்பாக குறைந்திருக்கலாம்!.
கோயில கடவுள் இல்லைன்னு நம்புறவன் கூட
சுடுகாட்ல பேய் இருக்குனு பயப்படுறான் #பகுத்தறிவு
உன்னை அறிவாளி என நினைத்துக்கொள்- அது உன்னுடைய தன்னம்பிக்கையாக கூட இருக்கலாம்
மற்றவர்களை முட்டாள் என்று எண்ணாதே அது உன்னுடைய முட்டாள்தனமாகவே முடியும்
அனுபவம் என்பது என்னவாயிருக்குறோம் எனபது அல்ல - எவ்வளவு கற்றுக்கொண்டோம் எனபது
கற்றல் என்பது கற்பிப்பதற்கே! (
Learning is teaching others, not teasing others )
தேவை என்பது இடத்தை பொறுத்தது பொருளை பொறுத்ததல்ல # Nothing is waste
தன் பிள்ளைகளோடு விளையாட முடியாத தகப்பன்கள் அவர்களுக்காக வாங்கிவைத்த பொம்மைகளோடு விளையாடி கொண்டிருக்கிறார்கள் # வெளிநாட்டுல வேலையப்ப
என்னால் முடிந்த ஒரு வேலையை நான் எந்த உதவியும் கேட்காத போது
தானாக முன்வந்து செய்து தருபவன், அவனது எதிர்பார்ப்பை என் மீது திணிப்பதாகவே உணர்கிறேன்
உனக்குள் உள்ள படைப்பாளியை நீ கண்டு கொள்ளாதவரை
உன்னை சுற்றி உள்ள படைப்பாளிகளை நீ கண்டறியமுடியாது
நல்லதோ ,கெட்டதோ, இரண்டுமே அனுபவம்தான்
எனக்கு அனுபவத்தை தந்த அனைவருக்குக்கும் நன்றி
என்னை காக்க நீ யாரடா உன்னை காக்கவே நானடா # இயற்கை
பல கோடி மரங்கள் நாட்டியாகிவிட்டது ஏனோ பறவைகளுக்கு எதுவும் வீடாகவில்லை #இயற்கைவாதி
அழியும் அழகுகள்
அன்ன நடை
பின்னல் சடை
கொடி இடை
மஞ்சள் பூசிய மேனி
கைகளில் மருதாணி
பாவாடை தாவணி